சிலர் தங்களுக்கு தீங்கு செய்தவர்களுக்கு, அதைப்போலவே துன்பம் உண்டாக்கும் செயல்களில் ஈடுபடுவர். இவ்வாறு இருத்தல் கூடாது, பழிவாங்கும் குணத்தை அறவே விட்டொழிக்க வேண்டும் என்கிறது இஸ்லாம். அல்லாஹ்விடம் மூஸா (அலை) என்ற வானதுõதர், ""என் அதிபதியே! உன் அடியார்களில் உனது அன்பிற்குரியவர் யார்?'' என்று கேட்டார். அதற்கு அல்லாஹ் சொன்ன பதில் உலகில் அனைவருக்கும் ஏற்புடையது. " எவர் பழி வாங்கும் சக்தியைப் பெற்றிருந்தும் மன்னித்து விடுகின்றாரோ, அவரே என்னிடம் மிகவும் நேசத்திற்கு உரியவர் ஆவார்,'' என்று. ஆம்! ஒருவர் உங்களுக்கு தீமையே செய்திருந்தாலும் அவரை பழிவாங்கும் எண்ணம் உங்களிடம் இருக்க கூடாது. மாறாக அவரிடம் அன்பையே செலுத்த வேண்டும்.