கண்களை விட்டுத் தூக்கம் களைய மறுக்குது உழைப்பின் தேவை ஏனோ உள்ளத்தை உலுப்புது தேவைகளுக்காக ஓடி ஓடி தேய்ந்து போன பாதாணிகளுடன்...... தேவைகள் கூடிக் கொண்டே அதனால் காலைப் பொழுதுகள் கனத்த நெஞ்சுடன் .... காரில் ஏறித் தெருவில் பயணம் அதே தெரு , அதே விளக்குக் கம்பம் என் வீட்டுத் தோட்டத்தில் பாடும் பறவை என்ன ? அது கூட அதே பறவைதானா ? விண்டர் என்றொரு விடியாத பொழுதுகளில் கூட எப்படி ? விழித்துக் கொள்கிறது எனது தேவைகள் ? வசந்த காலம் என பறவைக்குத் தெரிகிறது விளங்கவில்லையே என் வாழ்க்கைத் தேவைகளுக்கு மாரி ,வசந்தம் ,கோடை ,இலையுதிர் என காலங்கள் மட்டும் கணக்குத் தவறாமல் கலண்டர்களில் கழிந்து கொண்டிருக்கிறதே ! காலைப்பொழுதுகள் மட்டும் ஏனோ கடன்காரன் எனக்கு கனத்தவைதான் அதே சிவப்புக்கார் அதே வேகத்துடன் அதேபோல என்னை முந்திக்கொண்டு அவசரமாய் எங்கே போகிறான் ? அவனுக்கும் என்போல தேவைகளைத் தேடிய அவசரப் பயணமோ ? கனவுதான் அது !காலையிலே அம்மாகையிலே காப்பியுடன் கனிவாகத் தலையைக் கோதியபடி கண்போலக் காத்த கதை இன்று ஏனோகனவு போலவே தெரிகிறது. காலத்தின் கணக்குத்தானோ கனவுகளும் இல்லை அதை கண்களிலே தந்த அந்த அம்மாவும் இல்லை ம்... பழையபடி நிஜவுலகில் மீண்டும் எங்கே தேவைகளைத் தேடியமனித ஓட்டப் போட்டி காலைகள் வருகின்றன கழிந்து விட்டது என்றொரு திருப்தி கதவைத் தட்டுகிறது மீண்டும் காலைப்பொழுது வாழ்க்கைச் சக்கரம் தான் வரும் காலைப் பொழுது வரும் பொரு மாலைப்பொழுது வண்டியைப் போலே தொடர்ந்தும் வந்திடுதே காலைப்பொழுது பறவைகள் பாடுகின்றன பூக்கள் மலருகின்றன பனி படருகின்றது பளிச்சிடும் ஆதவன் பல இனிமை தரும் காலைப் பொழுதா ? பறிக்கின்றது என் மன இனிமையை இல்லை ! இல்லை !இயற்கையை ஏன் வீணாக இரைகின்றோம் நாம் நாமாக நமக்கு நாமே போட்டுக் கொண்ட நீளமான சங்கிலிநீக்கும் வழி தெரியாமல் நீண்டதொரு பெருமூச்சு காலைகள் கதிரவனுக்குத் தான் கண்ணிழந்த கருத்தழிந்த மனிதருக்கு அல்ல !