நபிகள் நாயகத்திற்கு திருமணமாகியிருந்த வேளை. புதுமணப் பெண்ணை நாயகத்திடம் அழைத்து சென்றார்கள். வீட்டிற்கு சென்றதும் நாயகம் ஒரு பாத்திரம் நிறைய பாலை எடுத்து வந்து குடித்தார். மீதியிருந்ததை தன் மனைவியிடம் நீட்டினார். அம்மையார் வெட்கத்தின் காரணமாக அதைக் குடிக்க சங்கோஜப்பட்டார். ஆனாலும் கணவரிடம் பதில் சொல்ல வேண்டுமே என்பதற்காக, ""இப்போது எனக்கு பசியில்லை,'' என்றார். நாயகம் அதைப்புரிந்து கொண்டு, ""நீர் ஒப்புக்காக கூட பசியையும் பொய்யையும் ஒன்று சேர்க்கக் கூடாது,'' என்றார். மிக மிக சாதாரண விஷயத்துக்கு பொய் சொல்வதைக் கூட நாயகம் தடுத்தார். பெற்றோர்கள் குழந்தைகளை, சிறுவயதிலிருந்தே விளையாட்டுக்கு கூட பொய் சொல்லாதிருக்கும்படி வழிநடத்த வேண்டும்.