Monday, December 17, 2007

வாசலிலே பூசணிப்பூ...

மார்கழி மாதத்தில் அதிகாலையில் வாசலில் கோலம் போட்டு அதன் மத்தியில் பூசணி அல்லது செம்பருத்தி பூ வைக்கும் வழக்கம் உள்ளது. இதற்கு ஒரு காரணம் இருக்கிறது.

எந்த வீட்டில் திருமணத்திற்கு தயாராக கன்னிப்பெண்கள் இருக்கின்றனரோ அங்குதான் கோலத்தின் மத்தியில் பூசணிப்பூ வைக்க வேண்டும். அப்போது, தங்கள் குடும்பத்தில் உள்ள பையனுக்கு வரன் தேடிக்கொண்டிருக்கும் பெற்றோர் பூசணிப்பூவை பார்த்து, அவ்வீட்டில் திருமணத்திற்கு தயாராக பெண் இருப்பதை புரிந்துகொள்வர். பின், தை மாதத்தில் அவ்வீட்டு பெண்ணை தங்கள் வீட்டு பையனுக்கு மணம் பேசி முடிப்பர். இதனால்தான் வாசலில் பூ வைக்கும் பழக்கம் உருவானது. இப்போது அவ்வழக்கம் மறைந்து அழகிற்காக வைக்கிறார்கள்.