Thursday, December 13, 2007

வாங்க ஸ்ருதி கமல் !

வாங்க ஸ்ருதி கமல் !
மாதவனுக்கு ஜோடியா நடிக்கப் போறீங்களாமே ? நல்லது. உங்க புகைப்படத்தைப் பார்த்த எல்லோருமே உங்களை திரையுலகத்துக்கு வர அழைப்பு விடுத்திருப்பார்கள். சகலகலா வல்லவனோட மகள்ங்கிறதனால இலவச விளம்பரம் கிடைக்கும்ன்னு பல இயக்குனர்கள் உங்களை நாடியிருப்பார்கள். உங்களை வைத்துப் படமெடுத்தால், நாளைக்கு அப்பாவிடம் நல்ல பெயர் கிடைக்கும் என்னும் முனைப்பில் சில தயாரிப்பாளர்களும் முன் வந்திருப்பார்கள். நல்லவேளை நீங்க மாதவன் கூட நடிக்கறீங்க, சிம்பு கூட நடிக்கல ன்னு நயன் தாரா மனசுக்குள்ள சொன்னதா கேள்விப்பட்டேன். உண்மையாக் கூட இருக்கலாம்! எப்படியோ, அப்பாவோட பேரை காப்பாத்துங்க. கண்ணாலேயே பேசக்கூடிய அப்பாவுக்கு தன்னோட கண்ணான வாரிசு வெறும் மெய்யால பேசினா மெய்யாலுமே பிடிக்காது. கவனத்துல வெச்சுக்கோங்க. திரையுலகிற்கு எத்தனையோ பேர் வராங்க, போறாங்க. சிலர் மட்டும் தான் சுவடுகளைப் பதிக்கிறாங்க. கமல் பொண்ணு நீங்க சொன்னா கப்புன்னு புடிச்சுப்பீங்க. ஞாபகம் வெச்சுக்கோங்க. ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும் தன்மகளைசான்றோள் எனக் கேட்ட டாட்.