ஒன்று.____ ஆண்கள் பிறக்கும் போது சுற்றமும் நட்பும் ஆனந்தமடைகிறது. பூங்கொத்துகள் அவனைப் பெற்ற அன்னைக்கு வழங்கப்படுகின்றன ! ஆண்கள் திருமணம் செய்து கொள்ளும் போது மனைவியருக்குத் தான் பரிசும், பூக்களும், பிரபலமும் கிடைக்கிறது ! ஆண்கள் சாகும்போதும் மனைவியருக்கே கிடைக்கிறது காப்பீட்டுத் தொகை.. ம்ம்…. இன்னும் ஆண்கள் பெண்களுக்காக என்ன தான் செய்யவேண்டுமென்று விரும்புகிறார்கள் ? அல்லது இன்னும் என்ன சுதந்திரம் தான் எதிர்பார்க்கிறார்கள் ? இரண்டு_____ ஒரு சராசரி ஆணின் முதல் கால் நூற்றாண்டு காலம் அவனுடைய அம்மா கேட்டுக் கொண்டே இருக்கிறாள்,’ எங்கே போறே ?’ அதன்பின் சுமார் நாற்பது வருடங்கள் அவனுடைய மனைவியும் அதே கேள்வியைக் கேட்டுக் கொண்டே இருக்கிறாள். கடைசியில் சுடுகாட்டில் சுற்றியிருக்கும் கூட்டமும் முணுமுணுக்கும்… அதே வார்த்தைகளை. மூன்று____ ஒரு மனிதன் தெருவில் நடந்து கொண்டிருந்தான். திடீரென ஒரு குரல் ‘அங்கேயே நில். இன்னும் ஒரு அடி எடுத்து வைத்தால் ஒரு செங்கல் உன் தலையில் விழும்’ அவன் நின்றான். அடுத்த வினாடி ஒரு பெரிய செங்கல் அவனுக்கு முன்னால் விழுந்து அவனை நடு நடுங்க வைத்தது. இன்னும் சற்று தூரம் நடந்தான். மீண்டும் அதே குரல் ‘அங்கேயே நில். இல்லையேல் பிரேக் பிடிக்காமல் வரும் ஒரு கார் உன்னை மோதி நீ சமாதியாவாய்’. அவன் நின்றான். அடுத்த வினாடி ஒரு கார் படு வேகமாக அவனைக் கடந்து போனது. அவன் வெலவெலத்தான். ‘நீ யார்… ‘ பயந்த அவன் கேட்டான். ‘நான் உன்னைக் காப்பாற்ற கடவுளினால் அனுப்பப்பட்டவன்’ குரல் சொன்னது. எரிச்சலடைந்த் மனிதன் கேட்டான்… ‘இப்போ எல்லாம் ஓடி ஓடி வந்து காப்பாத்தறியே.. நான் கல்யாணம் கட்டிகிட்டப்போ எங்கே போய் தொலஞ்சே…’ ——— ( சிரிக்க முடிஞ்சா சிரிங்க. இதைச் சொல்லி உங்க இரத்த அழுத்தத்தைக் கூட்டறது என் உத்தேசமில்லீங்க .. நம்புங்க… )