![](http://bp2.blogger.com/__mjhR6KaPzc/R3EmFRA2NwI/AAAAAAAAApg/wCvtKBsg8vE/s400/xmas.jpg)
MERRY CHRISTMAS & HAPPY NEW YEAR to all of My Friends
‘பொழுதுபோக்கின் உச்சக்கட்டம்’
மூன்று உணர்வுகளுக்கு மனிதன் மிக அதிகமாக ஆட்படுகிறான். அவை கோபம், மகிழ்ச்சி, வலிமை ஆகியன. இதுபற்றி நபிகள் நாயகம் சொல்வதைக் கேளுங்கள். ஒருவருக்கு கோபம் வரும்போது, பிறருக்கோ, தனக்கோ துன்பம் தரும் செயலை செய்யாத அளவுக்கு கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும். மகிழ்ச்சியோடு இருந்தால், மகிழ்ச்சியின் எல்லை ஒரு கட்டுப்பாட்டுக்குள், சத்திய வட்டத்திற்குள் இருக்க வேண்டும். வலிமையை பயன்படுத்தும் நேரத்தில், அதன் உதவியால் பிறர் பொருளை அபகரித்து விடக் கூடாது.
நபிகள் நாயகத்திற்கு திருமணமாகியிருந்த வேளை. புதுமணப் பெண்ணை நாயகத்திடம் அழைத்து சென்றார்கள். வீட்டிற்கு சென்றதும் நாயகம் ஒரு பாத்திரம் நிறைய பாலை எடுத்து வந்து குடித்தார். மீதியிருந்ததை தன் மனைவியிடம் நீட்டினார். அம்மையார் வெட்கத்தின் காரணமாக அதைக் குடிக்க சங்கோஜப்பட்டார். ஆனாலும் கணவரிடம் பதில் சொல்ல வேண்டுமே என்பதற்காக, ""இப்போது எனக்கு பசியில்லை,'' என்றார். நாயகம் அதைப்புரிந்து கொண்டு, ""நீர் ஒப்புக்காக கூட பசியையும் பொய்யையும் ஒன்று சேர்க்கக் கூடாது,'' என்றார். மிக மிக சாதாரண விஷயத்துக்கு பொய் சொல்வதைக் கூட நாயகம் தடுத்தார். பெற்றோர்கள் குழந்தைகளை, சிறுவயதிலிருந்தே விளையாட்டுக்கு கூட பொய் சொல்லாதிருக்கும்படி வழிநடத்த வேண்டும்.
சிலர் தங்களுக்கு தீங்கு செய்தவர்களுக்கு, அதைப்போலவே துன்பம் உண்டாக்கும் செயல்களில் ஈடுபடுவர். இவ்வாறு இருத்தல் கூடாது, பழிவாங்கும் குணத்தை அறவே விட்டொழிக்க வேண்டும் என்கிறது இஸ்லாம். அல்லாஹ்விடம் மூஸா (அலை) என்ற வானதுõதர், ""என் அதிபதியே! உன் அடியார்களில் உனது அன்பிற்குரியவர் யார்?'' என்று கேட்டார். அதற்கு அல்லாஹ் சொன்ன பதில் உலகில் அனைவருக்கும் ஏற்புடையது. " எவர் பழி வாங்கும் சக்தியைப் பெற்றிருந்தும் மன்னித்து விடுகின்றாரோ, அவரே என்னிடம் மிகவும் நேசத்திற்கு உரியவர் ஆவார்,'' என்று. ஆம்! ஒருவர் உங்களுக்கு தீமையே செய்திருந்தாலும் அவரை பழிவாங்கும் எண்ணம் உங்களிடம் இருக்க கூடாது. மாறாக அவரிடம் அன்பையே செலுத்த வேண்டும்.
ஒருமுறை நபிகள் நாயகமும் அவரது தோழர்களும் ஓரிடத்திற்கு பயணம் செய்து கொண்டிருந்தனர். அவர்கள் பயணம் செய்யும் வழியில் ஒரு தோட்டம் இருந்தது. அங்கு கட்டப்பட்டிருந்த ஒரு ஒட்டகம் கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தது. இதைக் கண்ட நாயகம், மன வருத்தப் பட்டார். ஒட்டகத்தின் உரிமையாளர் அதை பட்டினி போட்டுள்ளதைப் புரிந்து கொண்டார். நாயகம் அந்த ஒட்டகத்தை பரிவுடன் தடவிக்கொடுத்து, உரிமையாளரை அழைத்து, ""நீங்கள் இந்த வாயில்லா ஜீவனின் துன்பம் கண்டும், அல்லாஹ்வுக்கு அஞ்சவில்லையா?'' என்றார். இதிலிருந்து நாம் புரிந்து கொள்ள வேண்டியது மிருகங்களை பட்டினி போடுவது இறைவனுக்கு எதிரான விஷயம் என்பது தான். இதற்கு மற்றொரு உதாரணமும் சொல்லலாம். ஒரு மனிதன் பயணித்துக் கொண்டிருந்த போது, வழியில் தாகம் ஏற்பட்டது. அவன் ஒரு பாழடைந்த கிணற்றிற்குள் இறங்கினான். தண்ணீர் குடித்து விட்டு மேலே வந்த அவன், ஒரு நாய் அங்கு கிடந்த ஈர மண்ணை நக்குவதைப் பார்த்தான். மீண்டும் கிணற்றுக்குள் இறங்கி, தோலால் செய்யப்பட்ட தனது கால்உறையில் தண்ணீர் கொண்டு வந்து, அந்த நாயின் வாயைப் பிடித்து அதற்கு தண்ணீர் புகட்டினான். இந்த நற்செயலுக்காக அல்லாஹ் அந்த மனிதனின் பாவங்களை மன்னித்தார். இதையே, ""ஒவ்வொரு உயிரினத்தின் மீதும் கருணை காட்டுவதால் நற்கூலி கிடைக்கின்றது,'' என்கிறார் நபிகள் நாயகம்.
டாடா நிறுவனத்தின் ஒரு லட்சம் ரூபாய் கார், அடுத்தாண்டு விற்பனைக்கு வருகிறது; அதே விலையில், கார் தயாரித்து விற்க பல கார் தயாரிப்பு நிறுவனங்களும் களத்தில் இறங்க முடிவு செய்துள்ளன. நிசான் ரெனால்ட் நிறுவனம், அடுத்தாண்டு இறுதியில், இந்தியாவில், ரூ. 1.25 லட்சம் விலையில் கார் தயாரித்து விற்க திட்டமிட்டுள்ளது.இந்தியாவில், "மகிந்திரா மகிந்திரா' நிறுவனத்துடன் சேர்ந்து, நிசான் ரெனாவட் , சிறிய கார்கள் தயாரிப்பை துவங்க உள்ளது. இதுபோல, மாருதி கார் நிறுவனமும், ஒரு லட்சம் ரூபாய் விலையில் கார் விற்பனை செய்ய தீவிரமாக உள்ளது.டாடா நிறுவனம், ஒரு லட்சம் ரூபாய் விலையில் கார் தயாரிக்கிறது என்றதும், மற்ற நிறுவனங்கள் அதிர்ச்சி அடைந்தன. தயாரிப்பு செலவே அதிகமாகும் போது, இது சாத்தியமில்லை என்று கூறின. ஆனால், இப்போது, பல கார் தயாரிப்பு நிறுவனங்களும், அதே விலையில் கார் தயாரிக்க களம் இறங்கியுள்ளன.
மும்பையில் உள்ள சகாரா முதல் தர ஆடம்பர ஓட்டலில், ஒரு இரவு தங்குவதற்கு, அறை வாடகை ரூ.4 லட்சம் வசூலிக்கப்படுகிறது. மும்பை, சான்டா குரூஸ் விமான நிலையத்தில் இருந்து, 100 மீட்டர் தொலைவில், பிரபல சகாரா ஓட்டல் துவக்கப்பட்டுள்ளது. இந்த ஓட்டலில், 12 ஆயிரம் ச.அடியில் "பிரசிடென்ஷியல் சூட்' பரந்து விரிந்து அமைந்துள்ளது. இதற்கு தனி நுழைவாயில், தனி லிப்ட், கண்ணாடியால் ஆன மேற்கூரை, சிறப்பு நீராவி குளியல், மசாஜ் போன்ற வசதிகள் செய்யப் பட்டுள்ளன. இங்குள்ள அறையில் ஒரு இரவு தங்க வேண்டும் என்றால், வாடகை ரூ. நான்கு லட்சம். இது, "ஷேக்'குகளுக்காக அல்லாமல், பிரபல வர்த்தக பிரமுகர்கள் தங்குவதற்கு கட்டப்பட்டுள்ளது. உலகம் முழுவதிலும் உள்ள மற்ற "பிரசிடென்சியல் சூட்' அறை வாடகை, ரூ. ஆறு லட்சம் முதல் 10.18 லட்சம் வரை. அதனால், இங்கு ரூ.நான்கு லட்சம் வாடகை வசூலிப்பது அதிகம் அல்ல' என்றார்.டில்லியில் உள்ள தாஜ் மகால் ரிசார்ட்ஸ் அண்டு பேலஸ் ஓட்டலில், ஒரு இரவுக்கு ரூ. இரண்டு லட்சமும், ஐ.டி.சி., கிராண்ட் சென்ட்ரல் ஷெரட்டன் ஓட்டலில் ஒரு இரவுக்கு ரூ. ஒரு லட்சமும் வாடகை வசூலிப்பது குறிப்பிடத்தக்கது.
உலகில் அதிக நாள் வாழும் உயிரினம் ஆமை தான். 350 ஆண்டுகள் கூட வாழக்கூடியது. இதன் நாடித்துடிப்பு மிக மிக மெதுவாக இருக்கிறது. மரங்களில் அதிக ஆயுள் கொண்டது செக்கோயா என்ற பைன் மரம், எகிப்தில் (4 ஆயிரத்து 500 ஆண்டுகள்) பிரமிடு கட்டியபோது முளைத்த மரங்கள் இன்றும் வாழ்கின்றன.
உலகிலேயே முதல் முறையாக இன்டர்நெட் வழியாக
விவாகரத்து வழங்கப்பட்டுள்ளது.
அதுவும் சென்னையில் உள்ள குடும்ப கோர்ட்டில்
நீதிபதி தேவதாஸ் இதனை வழங்கியுள்ளார்.
கணவன் அமெரிக்காவிலும் மனைவி ஆஸ்திரேலியாவிலும் இருக்க
இவர்கள் நீதிமன்ற நடவடிக்கைகளில் கலந்து கொள்ள முடியாததால்
ஒரு லேப்டாப் கம்ப்யூட்டர் மற்றும் வெப்கேமரா மூலம்
வீடியோ கான்பரன்சிங் வழியாக நீதிபதி அவர்களுடைய
கருத்து மற்றும் வேண்டுதலைக் கேட்டு விவாகரத்தினை வழங்கினார்.
இந்த தீர்ப்பு நீதிமன்றத்திற்கு வந்திருந்த கணவன் மற்றும் மனைவியின்
பிரதிநிதிகளிடம் கொடுக்கப்பட்டது. சம்பந்தப்பட்ட இருவருக்கும்
இமெயில் மூலம் அனுப்பப்பட்டது.
(Technology to TamilNadu Family Courts, Only for NRIs)
நன்றி : தினமலர்
பர்மிங்காம்: உலகிலேயே முதல் முறையாக செயற்கை இதயம் பொருத்தப்பட்டவர் மரணமடைந்து விட்டார். ஆனால், அவரது இதயம் இயங்கிக் கொண்டு இருக்கிறது.
இங்கிலாந்தில் உள்ள பர்மிங்காமை சேர்ந்தவர் ஹவ்டன். 2000வது ஆண்டில், புளு காய்ச்சல் காரணமாக ஹவ்டனுக்கு கடுமையான மாரடைப்பு ஏற்பட்டது. அவர் ஆக்ஸ்போர்டில் உள்ள ஜான் ரட்கிளிப் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். டாக்டர் ராபர்ட் ஜார்விக் என்பவர் கண்டுபிடித்த செயற்கை இதயம் அதுவரை மனிதர்களிடம் பொருத்தி பரிசோதிக்கப்படவில்லை. இந்நிலையில் தான், டாக்டர் ராபர்ட் ஜார்விக் கண்டுபிடித்த செயற்கை இதயத்தை ஹவ்டனுக்கு பொருத்த திட்டமிடப்பட்டது. அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது. ஹாவ்டன் தற்காலிக செயற்கை இதயத்துடன் உயிர்வாழத் துவங்கினார். இந்த செயற்கை இதயம் தற்காலிகமாக மட்டுமே பயன்படும் வகையில் வடிவமைக்கப்பட்டு இருந்தது. கட்டை விரல் தடிமனில், இதயத்தின் இடது அறையில் வைக்கப்படும். சிறிய ஒயர் மார்பு வழியாக காதுக்கு பின்பக்கம் வரை பொருத்தப்பட்டு அதன் முனையில் பேட்டரி பொருத்தப்பட்டு இருக்கும்.
அறுவைச் சிகிச்சைக்கு பிறகு, ஹவ்டனால் தொடர்ச்சியாக ஒரு மைல் துõரம் கூட நடக்க முடிந்தது. தனது அறக்கட்டளையில் சுறுசுறுப்பாக பணியாற்ற முடிந்தது. அறக்கட்டளை சார்பில் 90 மைல் நடைபயணத்தில் பங்கேற்றார். ஆல்ப்ஸ் மலையில் ஏறினார். இதய ஆராய்ச்சியை ஊக்குவிக்க பல்வேறு இடங்களுக்கு பயணம் செய்தார். இரண்டு புத்தகங்களை எழுதி முடித்தார். இதய நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ நிதி திரட்டினார்.
பேட்டரி மாற்றும் போதெல்லாம் மருத்துவமனையில் சேர்ந்து அதை மாற்ற வேண்டியிருந்தது. கடந்த ஆண்டில் ஹவ்டனின் இதயம் 30 சதவீதம் நல்ல நிலைக்கு திரும்பிவிட்டது. இதனால், பேட்டரி மாற்றும் வரை அவரது இதயம் தானாகவே இயங்கியது. ஒரு முறை ஹவ்டன் கடைக்கு சென்றிருந்த போது, ஒரு திருடன், ஹவ்டனின் தோள்பகுதியில் புரண்ட பேட்டரி குடுவையை, நகை என்று நினைத்து பறித்துவிட்டான். அதில் பொருத்தப்பட்டிருந்த கருவி, பெரும் சத்தத்துடன் ஒலி எழுப்பவே திருடன் பிடிபட்டான். அந்த நேரத்தில் தானே யோசித்து, குடுவையை திரும்ப ஒயருடன் இணைத்துவிட்டார் ஹவ்டன். இப்படியாக ஏழு ஆண்டுகள் ஓடிவிட்டன. ஹவ்டனுக்கு வயது 68. அவரது உடல் உறுப்புகள் பல செயழிலக்கவே மரணமடைந்துவிட்டார். ஆனால், அவரது செயற்கை இதயம் இயங்கிக்கொண்டு தான் இருந்தது. பேட்டரியை டாக்டர்கள் நிறுத்தினால் தான், அவர் ,இறந்துவிட்டதாக அறிவிக்க முடியும்.
ஹவ்டனின் மனைவி டியானே. இவர்களுக்கு குழந்தை இல்லை. ஆனால், 11 குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகின்றனர்.
நன்றி : தினமலர்