Wednesday, September 10, 2008

பணக்கார இந்தியா

இந்தியர்களின் கறுப்பு பணம் ரூ.64 லட்சம் கோடி ஸ்விஸ் வங்கியில் 
நாம் அனைவரும் நிணைத்துக்கொண்டிருக்கிற மாதிரி இந்தியா ஏழை நாடு அல்ல. ஆமாம். 100 சதவிகித 'அக்மார்க' உண்மை நம்ப முடியவில்லையா?..தொடர்ந்து படியுங்கள். 

இந்திய மக்களிடமிருந்து ஊழல், கமிஷன் மற்றும் லஞ்சம் மூலம்- கொள்ளையடித்து,  கணக்கு காட்டாமல் சுவீஸ் வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டிருக்கும் கறுப்பு பணம் எவ்வளவு தெரியுமா? ரூ.64 லட்சம் கோடி (1456 பில்லியன் அமெரிக்க டாலர்) என்ற அதிர்ச்சி தகவலை சுவிட்சர்லாந்து வங்கிகளின் கூட்டமைப்பு  (Swiss Banking Association) தனது ஆண்டு அறிக்கையில் வெளியிட்டுள்ளது. 

 இந்த தொகை உலக வங்கி (World Bank), உலக நிதி நிறுவனம் (Internationala Monetary Fund), மற்றும் வளர்ந்த நாடுகளிடமிருந்து இந்தியா தனது வளர்ச்சி திட்டங்களுக்கக வாங்கியிருக்கும் வெளிநாட்டு கடனின் மொத்த மதிப்பைவிட 13 மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. 


இந்தப் பணத்தையெல்லாம் பதுக்கி வைத்திருக்கும் ‘யோக்கிய சிகாமனிகள்' யார் தெரியுமா?
நமது இந்தியாவின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் பணியாற்ற தேர்ந்தெடுக்கப்பட்ட அய்.ஏ.எஸ், ஐ.பி.எஸ், மற்றும் அர்சியல் வாதிகள்தான். 

 உலக நாடுகள் வியக்கும் அளவுக்கு அசுர வேகத்தில் இந்திய வளர்ந்து கொண்டிருக்கிறது. முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், 2020 ஆண்டு, இந்தியா வல்லரசாகவேண்டும் என்று கனவு காணச்சொல்லியிருக்கிறார். ஆனால், தற்பொழுது வெளியாகியுள்ள இந்த விஷயம், ஒழுக்க நெறிமுறைகள், அறநெறிகள், மதிப்பீடுகள் இல்லாத இந்தியாவின் வளர்ச்சி என்றாவது ஒருநாள் நிலைகுலைந்து போகும் என்ற அச்சத்தை உருவாக்கியிருக்கிறது, 
சமீபத்தில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் ஒரே ஒரு தங்கம் பெற்ற இந்தியா, ஸ்விஸ் வங்கியில் 'கள்ள' கணக்கு வைத்திருக்கும் முதல் ஐந்து நாடுகளில் - முதலிடத்தை தட்டி செல்கிறது.

1. இந்தியா---- $1,456 billion

2. ரஷ்யா---$ 470 billion

3. UK -------$390 billion

4. உக்ரைன் - $100 billion

5. சீனா -----$ 96 billion

 அது மட்டுமல்ல, இந்தியாவின் வைப்புத்தொகை ($1456 பில்லியன்) - மற்ற நான்கு நாடுகளின் மொத்த வைப்புத்தொகையை ($1056 பில்லியன்) விட அதிகம். 
இந்த பணத்தை இந்திய மக்களுக்கு பிரித்துக்கொடுத்தால், 45 கோடி பேருக்கு - ஒவ்வொருவருக்கும் 1,00,000 ரூபாய் கிடைக்குமாம்..

 இந்திய மக்களிடமிருந்து பறிக்கப்பட்ட இந்த பணத்தை, இந்தியா சட்ட \ரீதியாக நடவடிகையெடுத்து மீண்டும் $1456 பில்லியன் பணமும் திரும்பவும் இந்தியாவுக்கே வந்துவிட்டால் ஒரே நாளில் நமது வெளிநாட்டு கடனை அடைத்துவிட்டு, மீதியிருக்கும் பணத்தை Fixed Deposite -ல் போட்டால், அதிலிருந்து வரும் வட்டி - இந்திய அரசின வருடாந்திர 'பட்ஜெட்' க்கு ஒதுக்கப்படும் தொகையைவிட அதிகமாக கிடைக்குமாம். அதனால், துண்டு விழாத பட்ஜெட் போடலாம், புதிய வரிகள் போடுவதை தவிர்க்கலாம், 

 வறுமைகோட்டுக்கு கீழே உள்ள இந்தியர்களை அப்படியே 'அலாக்'காக துக்கி (வறுமை) கோட்டுக்கு மேலே வைத்து 'கோட்டும்- சூட்டும்' போட்டு பார்க்கலாம். 

 (Courtesy:)
http://www.merinews.com/catFull.jsp?articleID=137213&catID=10&category=Reviews
http://evirtualpie.com/?q=node/434