No, this is not Alice in the wonderland! It's the
Grand opening of Atlantis hotel in Dubai
Where the cheapest room goes for $35,000 a night!
Monday, July 26, 2010
Such a Dreamworld Don't Miss it...
நம்ம ஊர் – 25
நம்ம ஊர் – 25 கோயிலுக்கு ஒரு டியூப் லைட்ட தானமாக் கொடுத்தாக் கூட டியூப் லைட்டோட பாதி இடத்தில் நம்ம குலம் கோத்திரத்தை பதிக்கிற இனம். காய்கறி கடையில 10 ரூபாய்க்கு 2 ரூபாய் குறைக்கச் சொல்லி பேரம் பேசுவோம். மெக்டொனால்ட்ல கொடுத்த பில்லுக்கு மேல 10 ரூபாய் டிப்ஸ் வைப்போம். கார் லோன் வட்டி 5%க்கும் கல்விக்கான லோன் வட்டி 12%க்கும் கிடைக்கும். ஓசியில சோப்பு டப்பா குடுக்கறாங்கன்னா, தேவையே இல்லைன்னா கூட ஆயிரக்கணக்கில் செலவு பண்ணுவாங்க. சாப்பிடுற அரிசி கிலோ 40ரூபாய்க்கும் பேசர செல்போன் சிம் இலவசமாகவும் கிடைக்கும். தமிழன் தமிழ்ன்னு வாய்கிழிய பேசினாலும் நார்த், சவுத், ஈஸ்ட் வெஸ்ட் என எல்லா திசையிலும் தமிழன ரவுண்டு கட்டி அடிச்சாலும் ஸ்டடியா இருக்கறவங்க. சச்சினும் தீபிகா படுகோனும் விளம்பரத்துல வந்து பினாயிலை வாங்கிக் குடிக்கச் சொன்னாக்கூட அதுக்கும் தயாரா இருப்போம். நம்ம நிலத்துல விளையற வெளிய விளைச்சலை வித்துட்டு கடைக்கு போய் அரிசி வாங்கி சாப்பிடுற ஜென்மம். கால்ல மாட்டுற செருப்பை AC ஷோரூமில் விப்பாங்க. சாப்பிடுற காய்கறிகளை தெருவோரத்தில் விப்பாங்க. 50 ரூபா சினிமா டிக்கட்ட பிளாக்ல 100ரூபாய்க்கு வாங்கி ஊழலை ஒழிக்கப் போறாடும் கதாநாயகன் கதைக்கு விசிலடிக்கும் ரசனைக்காரர்கள். ஆர்டர் பண்ணா பிஸ்ஸா, ஆம்புலன்ஸ் போலிஸை விட சீக்கிரமா வந்து சேறும். செயற்கை வாசம் உள்ள லெமன் குளிர்பானத்தை குடித்து, இயற்கையான லெமன் சாற்றை சாமான்கள் துலக்கப் பயன்படுத்துவார்கள். எங்க ஊரு கவர்ன்மெண்ட் ஸ்கூல் வாத்தியார்கள் அவங்களோட பசங்களை மட்டும் பிரைவேட் ஸ்கூலில் படிக்க வைப்பாரு. பள்ளிக்கூடம், மருத்துவமனைகளை தனியார் நடத்த, அரசாங்கம் சாராய கடை நடத்தும். கவிதை படிக்கறவங்களை விட கவிதை எழுதுறவங்க அதிகமா இருப்பாங்க. தேர்தல் சமயத்துல ஓட்டுக்கு துட்டு கொடுத்து பல 100 கோடிகள் செலவு பண்ணி மக்கள் சேவைக்காக மட்டுமே ஆட்சி பிடிக்கும் புண்ணியவான்கள் இருக்கும் தேசம். ஒரு லிட்டர் கோக், பெப்ஸி, ஒரு லிட்டர் பாலைவிட அதிகமான விலைக்கு விக்கும். புது பேண்ட் 300 ரூபான்னா, அங்கங்க கிழிச்சு விக்கற ஜீன்ஸ் பேண்ட் 1000 ரூபா. இங்கிலிஷ் பேசத் தெரிந்தா அறிவுஜீவி, இந்தி பேசத் தெரிந்தா தமிழ் துரோகி. 100 ரூபா லஞ்சம் வாங்கினா புழல், 100 கோடி ஊழல் பண்ணா குஜால். மின்சாரத் தடையை அதிகாரி அறிவிப்பார். தடை நீக்கத்தை அமைச்சர் அறிவிப்பார். உடலும் மனமும் ஒத்துழைக்காதுன்னு பியூனுக்குக் கூட 60 வயசுல பணி ஓய்வு கொடுத்துடுவாங்க. 60 வயசுக்கு மேல இருக்கறவங்க அமைச்சரா நம்மை ஆளுவாங்க. இந்திய கிரிக்கட் டீம், சர்வதேச போட்டிகளில் நாயடி வாங்கி டப்பா கிழிஞ்சாலும் அடுத்த ஐ.பி.எல் வந்தா சாமி கும்பிட்டு டீவி முன்னாடி சரண்டர் ஆகிடுவாங்க தெருக்குழாய் உடஞ்சிருந்தா 100 ரூபாய் செலவு பண்ணி பஞ்சாயத்து தலைவரையோ, கார்பரேஷனையோ திட்டி கம்ப்ளெய்ட் பண்ணுவாங்க. இன்டர்நெட்டுக்குப் போய் பிளாக் எழுதுவாங்க. 40 ரூபாய் செலவு செஞ்சு அதை சரிபண்ணயிருக்க மாட்டாங்க. டீக்கடை பேப்பரில் குழந்தை தொழிலாளர் பற்றி படித்து, “குழந்தை தொழிலாளர்களை வேலை வாங்குபவர்களை நடுத்தெருவில் உதைக்கவேண்டும்” என்று பேசிக்கொண்டே “டேய் சின்னப்பையா, ரெண்டு டீ கொடுடா” ன்னு ஆர்டர் செய்வாங்க.
Subscribe to:
Posts (Atom)