Monday, July 26, 2010

Such a Dreamworld Don't Miss it...

No, this is not Alice in the wonderland! It's the 
Grand opening of Atlantis hotel in Dubai Where the cheapest room goes for $35,000 a night!

நம்ம ஊர் – 25

நம்ம ஊர் – 25

கோயிலுக்கு ஒரு டியூப் லைட்ட தானமாக் கொடுத்தாக் கூட டியூப் லைட்டோட பாதி இடத்தில் நம்ம குலம் கோத்திரத்தை பதிக்கிற இனம்.

காய்கறி கடையில 10 ரூபாய்க்கு 2 ரூபாய் குறைக்கச் சொல்லி பேரம் பேசுவோம். மெக்டொனால்ட்ல கொடுத்த பில்லுக்கு மேல 10 ரூபாய் டிப்ஸ் வைப்போம்.

கார் லோன் வட்டி 5%க்கும் கல்விக்கான லோன் வட்டி 12%க்கும் கிடைக்கும்.

ஓசியில சோப்பு டப்பா குடுக்கறாங்கன்னா, தேவையே இல்லைன்னா கூட ஆயிரக்கணக்கில் செலவு பண்ணுவாங்க.

சாப்பிடுற அரிசி கிலோ 40ரூபாய்க்கும் பேசர  செல்போன் சிம் இலவசமாகவும் கிடைக்கும்.

தமிழன் தமிழ்ன்னு வாய்கிழிய பேசினாலும் நார்த், சவுத், ஈஸ்ட் வெஸ்ட் என எல்லா திசையிலும் தமிழன ரவுண்டு கட்டி அடிச்சாலும் ஸ்டடியா இருக்கறவங்க.

சச்சினும் தீபிகா படுகோனும் விளம்பரத்துல வந்து பினாயிலை வாங்கிக் குடிக்கச் சொன்னாக்கூட அதுக்கும் தயாரா இருப்போம்.

நம்ம நிலத்துல விளையற வெளிய விளைச்சலை வித்துட்டு கடைக்கு போய் அரிசி வாங்கி சாப்பிடுற ஜென்மம்.

கால்ல மாட்டுற செருப்பை AC ஷோரூமில் விப்பாங்க. சாப்பிடுற காய்கறிகளை தெருவோரத்தில் விப்பாங்க.

50 ரூபா சினிமா டிக்கட்ட பிளாக்ல 100ரூபாய்க்கு வாங்கி ஊழலை ஒழிக்கப் போறாடும் கதாநாயகன் கதைக்கு விசிலடிக்கும் ரசனைக்காரர்கள்.

ஆர்டர் பண்ணா பிஸ்ஸா, ஆம்புலன்ஸ் போலிஸை விட சீக்கிரமா வந்து சேறும்.

செயற்கை வாசம் உள்ள லெமன் குளிர்பானத்தை குடித்து, இயற்கையான லெமன் சாற்றை சாமான்கள் துலக்கப் பயன்படுத்துவார்கள்.

எங்க ஊரு கவர்ன்மெண்ட் ஸ்கூல் வாத்தியார்கள் அவங்களோட பசங்களை மட்டும் பிரைவேட் ஸ்கூலில் படிக்க வைப்பாரு.

பள்ளிக்கூடம், மருத்துவமனைகளை தனியார் நடத்த, அரசாங்கம் சாராய கடை நடத்தும்.

கவிதை படிக்கறவங்களை விட கவிதை எழுதுறவங்க அதிகமா இருப்பாங்க.

தேர்தல் சமயத்துல ஓட்டுக்கு துட்டு கொடுத்து பல 100 கோடிகள் செலவு பண்ணி மக்கள் சேவைக்காக மட்டுமே ஆட்சி பிடிக்கும் புண்ணியவான்கள் இருக்கும் தேசம்.

ஒரு லிட்டர் கோக், பெப்ஸி, ஒரு லிட்டர் பாலைவிட அதிகமான விலைக்கு விக்கும்.

புது பேண்ட் 300 ரூபான்னா, அங்கங்க கிழிச்சு விக்கற ஜீன்ஸ் பேண்ட் 1000 ரூபா.

இங்கிலிஷ் பேசத் தெரிந்தா அறிவுஜீவி, இந்தி பேசத் தெரிந்தா தமிழ் துரோகி.

100 ரூபா லஞ்சம் வாங்கினா புழல், 100 கோடி ஊழல் பண்ணா குஜால்.

மின்சாரத் தடையை அதிகாரி அறிவிப்பார். தடை நீக்கத்தை அமைச்சர் அறிவிப்பார்.

உடலும் மனமும் ஒத்துழைக்காதுன்னு பியூனுக்குக் கூட 60 வயசுல பணி ஓய்வு கொடுத்துடுவாங்க. 60 வயசுக்கு மேல இருக்கறவங்க அமைச்சரா நம்மை ஆளுவாங்க.

இந்திய கிரிக்கட் டீம், சர்வதேச போட்டிகளில் நாயடி வாங்கி டப்பா கிழிஞ்சாலும் அடுத்த ஐ.பி.எல் வந்தா சாமி கும்பிட்டு டீவி முன்னாடி சரண்டர் ஆகிடுவாங்க

தெருக்குழாய் உடஞ்சிருந்தா 100 ரூபாய் செலவு பண்ணி பஞ்சாயத்து தலைவரையோ, கார்பரேஷனையோ திட்டி கம்ப்ளெய்ட் பண்ணுவாங்க. இன்டர்நெட்டுக்குப் போய் பிளாக் எழுதுவாங்க. 40 ரூபாய் செலவு செஞ்சு அதை சரிபண்ணயிருக்க மாட்டாங்க. 

டீக்கடை பேப்பரில் குழந்தை தொழிலாளர் பற்றி படித்து, “குழந்தை தொழிலாளர்களை வேலை வாங்குபவர்களை நடுத்தெருவில் உதைக்கவேண்டும்” என்று பேசிக்கொண்டே “டேய் சின்னப்பையா, ரெண்டு டீ கொடுடா” ன்னு ஆர்டர் செய்வாங்க.

Thursday, June 24, 2010

World's Strange Places - Rare Photos and Information...

Blue Hole


Blue holes are giant and sudden drops in underwater elevation that get their name from the dark and foreboding blue tone they exhibit when viewed from above in relationship to surrounding waters. They can be hundreds of feet deep and while divers are able to explore some of them they are largely devoid of oxygen that would support sea life due to poor water circulation – leaving them eerily empty. Some blue holes, however, contain ancient fossil remains that have been discovered, preserved in their depths.
Sailing Stones
The mysterious moving stones of the packed-mud desert of Death Valley have been a center of scientific controversy for decades. Rocks weighing up to hundreds of pounds have been known to move up to hundreds of yards at a time. Some scientists have proposed that a combination of strong winds and surface ice account for these movements. However, this theory does not explain evidence of different rocks starting side by side and moving at different rates and in disparate directions. Moreover, the physics calculations do not fully support this theory as wind speeds of hundreds of miles per hour would be needed to move some of the stones.
Columnar Basalt
When a thick lava flow cools, it contracts vertically but cracks perpendicular to its directional flow with remarkable geometric regularity - in most cases forming a regular grid of remarkable hexagonal extrusions that almost appear to be made by man. One of the most famous such examples is the Giant’s Causeway on the coast of Ireland (shown above), though the largest and most widely recognized would be Devil’s Tower in Wyoming. Basalt also forms different but equally fascinating ways when eruptions are exposed to air or water.

Monday, April 26, 2010

படி.. அல்லது பன்னி மேய்‏...

1) “செய்... அல்லது செத்துமடி...” ---- நேதாஜி..
“படி.. அல்லது பன்னி மேய்...” --- எங்க பிதாஜி....

2) ஆசிரியர்: எவன் ஒருவனால் ஒரு விசயத்தை மற்றவர்களுக்கு புரிய வைக்க முடியவில்லையோ அவன் ஒரு முட்டாள்...
மாணவர்கள்: புரியல சார்...

3) போலீஸ்: பஸ் எப்படி விபத்தில் சிக்கியது?
டிரைவர்: அதான் எனக்கும் புரியல சார்... நான் நல்ல தூக்கத்தில இருந்தேன்.

4) மகன்: அப்பா! ஓவரா என்னை பக்கத்து வீட்டுப் பொண்ணோட கம்பேர் பண்ணிகிட்டு இருப்பியே... இப்ப பாரு... அவ 470 மார்க்.. நான் 480... மார்க்.
அப்பா: சனியனே... அவ பத்தாவது படிக்கிறா... நீ +2 படிக்கிரடா

5) மனைவி கணவனுக்கு இலக்கணம் சொல்லி கொடுக்கிறாள்.
மனைவி: நான் ரொம்ப அழகு... இது என்ன காலம்? (Tense)
கணவன்: அது ஒரு இறந்த காலம்....

11) தேர்வு அறையில்...
மாணவன்: ஆல் தி பெஸ்ட்!
மாணவி: ஆல் தி பெஸ்ட்!
மாணவன் பெயில்.... மாணவி 80%
நீதி: நல்லவங்க வாக்கு மட்டும்தான் பலிக்கும்....
(ஒழுங்கா படிக்க முடியாததுக்கு என்னமா சமாளிக்கிறான்னு பாருங்க....)

12) நாட்டாமை: என்ரா... பசுபதி...எக்ஸாம்’க்கு பெவிகால் எடுத்துட்டுப் போற?
பசுபதி: அய்யா.. கொஸ்டின் பேப்பர் லீக் ஆகிப் போச்சாம்..
நாட்டாமை: என்ர தம்பி சிங்கம்டா.. சிங்கம்டா..... சிங்கம்டா..

13) முடியாது என்று சொல்பவன் முட்டாள்...
முடியும் என்று சொல்பவந்தான் புத்திசாலி...
இப்ப சொல்லுங்க...என் “செல்”லுக்கு டாப்-அப் பண்ண முடியுமா...முடியாதா...?

14) லவ் லட்டருக்கும், எக்ஸாம்’க்கும் என்ன வித்தியாசம்?
லவ் லெட்டர்: மனசுக்குள்ள நிறைய இருக்கும்.. ஆனா எழுத வராது...
எக்ஸாம்: மனசுக்குள்ள ஒண்ணுமே இருக்காது... ஆனா நிறைய எழுதுவோம்... எப்பூடி?


16) கணவன்: காலெண்டர்’ல என்னப் பாக்குற?
மனைவி: பல்லி விழும் பலன்...
கணவன்: கொண்டா.. நான் பாக்குறேன்... அது சரி... பல்லி எங்க விழுந்தது?
மனைவி: நீங்க சாப்ட்ட சாம்பார்ல...

17) சைன்டிஸ்ட் எல்லாம் சொர்க்கத்தில கண்ணாமூச்சி விளையாடிட்டு இருக்காங்க.. நம்ம ஐன்ஸ்டீன் கண்டு பிடிப்பவர்... ஆனால் நியூட்டன் ஒளிந்து கொள்ளாமல் ஒரு மீட்டர் சதுரத்தில் நிற்கிறார்.....
ஐன்ஸ்டீன்: நியூட்டனைக் கண்டுபிடித்து விட்டேன்....
நியூட்டன்: இல்லை... தவறு... நான் நியூட்டன் இல்லை.. நான் ஒரு மீட்டர் சதுரத்தில் நிற்கிறேன்.. நான் நியூட்டன்/மீட்டர்.. எனவே நான் இப்போது பாஸ்கல்....
ஐன்ஸ்டீன்: ராஸ்கல்... என்ன இது சின்னப்புள்ளத்தனமா இருக்கு....?

18) நம்ம அய்யாச்சாமி நடு ஆற்றில் படகில் போய்க கொண்டிருக்கிறார்... அப்போது தூரத்தில் ஒரு போர்டு உள்ளதைப் பார்த்து அதில் என்ன எழுதி இருக்கிறது என்று படிக்க முயல்கிறார். ஆனால் அவரால் படிக்க முடியவில்லை... எனவே அவர் படகிலிருந்து குதித்து நீந்தி சென்று படிக்கிறார்...
“இங்கு முதலை உள்ளது...யாரும் இங்கே நீந்த வேண்டாம்.”

19) நம்ம சூப்பர் ஸ்டார் சாப்ட்வேர் என்ஜினியராக ஒரு படத்தில் நடித்தால் பன்ச் டயலாக் எப்படி இருக்கும்?

* J to the A to the V to the A --- JAVA
* கண்ணா... வைரஸ் தான் கூட்டமா வரும். ஆண்ட்டி வைரஸ் சிங்கில்’லாத்தான் வரும்.
* C க்கு அப்புறம் C++... எனக்கு அப்புறம் NO++

20) வாழ்கையின் முக்கிய ஏழு நிலைகள்.(Stages)
1. படிப்பு
2. விளையாட்டு
3. பொழுது போக்கு
4. காதல்
5.
6.
7.
ஹலோ... என்ன தேடுறீங்க? காதல் வந்த பிறகுதான் எல்லாமே நாசமாப் போயிருமே...!

Sunday, April 25, 2010

First Miss India...

First Miss India ( held in the year 1949) Pramila (Esther Abraham) is now 90 Years old
REMEMBER :: Time takes away everything from you.... BE GOOD AND DO GOOD TO ANYBODY AND EVERYBODY IN THE WORLD.. BECAUSE SKIN, FACE, & PERSONALITY WILL NEVER STAY BUT YOUR WORK AND NAME WILL ALWAYS BE THERE.